Kulanthai yesu - Infant Jesus- குழந்தை இயேசு - 2062995927253725

Download MP4 SD 4.46MB
  • QR code for mobile device to download SD video

கருவினில் கடவுளை சுமந்தவளே அம்மா
அருளினை நிறைவாய்க் கொண்டவளே அம்மா
உன் மார்போடு நான் சாய்ந்து
மகிழ வேண்டுமஅம்மா-உன்
மடிமீது தலை சாய்த்து உறங்க வேண்டும் அம்மா
கருவினில் கடவுளை சுமந்தவளே அம்மா

உந்தன் பெயரை ஒருமுறை சொன்னால்
உள்ளம் இங்கே மகிழ்கின்றது
கண்கள மூடி கரங்கள் குவித்தால்
புதுமைகள் கோடி நிகழ்கின்றது-2
அம்மா நான் உன் பிள்ளை
தொல்லை இனி இல்லை
உன் திருவடி அமர்வது போதுமம்மா
திருவருள் வாழ்வினில் சேருமம்மா

இதோ உன் அடிமை என்றவளே-இவ்
உலகத்தின் தாயாய் உதித்தவளே
இறைவன் யேசுவின் தியாகப் பலியிலே
சிலுவை வரைக்கும் சென்றவளே-2
அம்மா என் அடைக்கலமே
இம்மா நில இராக்கினியே-உன்
திருவடி அமர்வது போதுமம்மா
திருவருள் வாழ்வினில் சேருமம்மா

Posted 2 years ago in OTHER